/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ராஸ் டெக்கர்ஸ் அகாடமி மாநில கால்பந்தில் முதலிடம்
/
மெட்ராஸ் டெக்கர்ஸ் அகாடமி மாநில கால்பந்தில் முதலிடம்
மெட்ராஸ் டெக்கர்ஸ் அகாடமி மாநில கால்பந்தில் முதலிடம்
மெட்ராஸ் டெக்கர்ஸ் அகாடமி மாநில கால்பந்தில் முதலிடம்
ADDED : நவ 11, 2025 12:27 AM

கோவிலம்பாக்கம்: மாநில கால்பந்து போட்டியில், மெட்ராஸ் டெக்கர்ஸ் கால்பந்து அகாடமி அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
'மெட்ராஸ் டெக்கர்ஸ் கால்பந்து அகாடமி' சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டி, சென்னை கோவிலம்பாக்கத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடந்தது. மொத்தம் 56 அணிகளில் 560 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.
இதில், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நடந்த போட்டிகளில், சிறப்பாக விளையாடிய மெட்ராஸ் டெக்கர்ஸ் அகாடமி அணி, சாம்பியன் பட் டத்தை கைப்பற்றியது. ஷாடோ எப்.சி., அணி, இரண்டாம் இடம் பெற்றது.
வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மெட்ராஸ் டெக்கர்ஸ் கால்பந்து அகாடமியின் நிறுவனர் செந்தில்குமரன் வழங்கி பாராட்டினார். போட்டியில், சிறந்த ஆட்டக்காரரான மித்ரன், தொடர் நாயகன் விருது பெற்றார்.