/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டி மதுரை இந்திராகாந்தி அணி சாம்பியன்
/
முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டி மதுரை இந்திராகாந்தி அணி சாம்பியன்
முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டி மதுரை இந்திராகாந்தி அணி சாம்பியன்
முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டி மதுரை இந்திராகாந்தி அணி சாம்பியன்
ADDED : ஜூலை 05, 2025 11:53 PM

சென்னை,மாநில அளவில் நடக்கும் பள்ளிகளுக்கு இடையிலான முருகப்பா ஹாக்கி தொடரில், மதுரையின் இந்திரா காந்தி அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
முருகப்பா குரூப்ஸ் சார்பில், அகில இந்திய அளவில், '96வது எம்.சி.சி., முருகப்பா கோல்டு கோப்பை' ஹாக்கி போட்டி, வரும் 10ம் தேதி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துவங்குகிறது.
இதன் முன்னோட்டமாக, 17 வயதுக்குட்பட்ட மாநில பள்ளி மாணவர்களுக்கு இடையே, 3வது மாநில, 'எம்.சி.சி. முருகப்பா கோப்பை' ஹாக்கி போட்டி, ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.
இதில், சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த, எட்டு பள்ளிகள் பங்கேற்றன. இறுதி போட்டி நேற்று நடந்தது.
இதில், சிறப்பாக விளையாடிய மதுரை அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் எதிர்த்து விளையாடிய, வேலுார் அரசு பள்ளி அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திராகாந்தி பள்ளி அணி சார்பில், தீப பிரகாஸ் இரண்டு கோல், அவினாஷ் ஒரு கோல் அடித்தார்.
வேலுார் அரசு பள்ளி அணி சார்பில், சந்தோஷ் குமார் தன் அணிக்கு இரண்டு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.