/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தம்பதி மீது கத்தி வீசிய நால்வர் கைது
/
தம்பதி மீது கத்தி வீசிய நால்வர் கைது
ADDED : ஜூலை 05, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :திருவல்லிக்கேணியில் முன்விரோதம் காரணமாக, தம்பதி மீது கத்தியை வீசி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் குமரேசன், 35. நேற்று முன்தினம் மதியம், கோயா அருணகிரி, 4வது தெரு வழியாக மனைவியுடன் நடந்து சென்றார்.
அப்போது, ஆட்டோவில் வந்த நால்வர், முன்விரோதம் காரணமாக, தம்பதியை கொலை செய்யும் நோஒக்கில் கத்தியை வீசினர். குமரேசன் கத்தியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டதால், நால்வரும் தப்பினர்.
வழக்கு பதிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், ராயப்பேட்டை பிரசாந்த், 35, சீனிவாசபுரம் சத்யா, 33, திருவல்லிக்கேணி சையத் லத்தீப், 21, அருண், 21, ஆகியோரை கைது செய்தனர்.