/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயல் கூவம் கரையோரம் குப்பையை எரிப்பதால் சீர்கேடு
/
மதுரவாயல் கூவம் கரையோரம் குப்பையை எரிப்பதால் சீர்கேடு
மதுரவாயல் கூவம் கரையோரம் குப்பையை எரிப்பதால் சீர்கேடு
மதுரவாயல் கூவம் கரையோரம் குப்பையை எரிப்பதால் சீர்கேடு
ADDED : ஜன 30, 2024 12:18 AM

மதுரவாயல், மதுரவாயல் கூவம் கரையோரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ், வானகரம் சர்வீஸ் சாலையில், அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியாகும் போது, குப்பை அகற்றப்படுகிறது.
தற்போது, மதுரவாயல் மேம்பாலம் கீழ், நொளம்பூர் சர்வீஸ் சாலை கூவம் கரையோரம், தனியார் கல்லுாரி அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, இங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் மலைபோல குப்பை குவிந்துள்ளது.
சமூக விரோதிகள் சிலர், அதை தீயிட்டுக் கொளுத்துவதால் கரும்புகை சூழ்ந்து, வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு, கடும் அவதியடைந்தனர்.
இந்த குப்பைக் கழிவுகளை உண்ண வரும் பசு மாடுகள், இந்த தீயில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கூவம் கரையோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.