/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
/
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை
ADDED : அக் 23, 2025 12:42 AM

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் இரவும் முறையோ சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.
வரும், 27ம் தேதி காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சூரசம்ஹார உத்சவம் நடக்கிறது.
பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம், மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.
திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் நவ., 1 வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.