/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மகாகும்பாபிஷேகம்
/
மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மகாகும்பாபிஷேகம்
மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மகாகும்பாபிஷேகம்
மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மகாகும்பாபிஷேகம்
ADDED : ஏப் 09, 2025 12:22 AM
சென்னை திருப்பணி மேற்கொள்ளப்பட்ட மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் காலை நடக்கிறது.
அய்யப்பன் மண்டலி செயலர் மகாலிங்கம், மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் டிரஸ்ட் செயலாள்ர ஸ்ரீவீரபத்திரன் ஆகியோர் கூறியதாவது:
சென்னை, மடிப்பாக்கத்தில், 1978, ஜூன் 6ம் தேதி, சபரிமலையின் தாந்திரி, செங்கன்னுார் தாழமன் மடம் நீலகண்டரு தாந்திரி வாயிலாக சுவாமி அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோவில், உத்தர சபரி கிரிஷம் என்று அழைக்கிறது. சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலை போன்றே, இக்கோவிலில் அனைத்து நடைமுறைகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன.
இக்கோவிலை புனரமைக்க நராயணனன் நம்பூதி என்பவரால், 2022ல் அஷ்ட மங்கல தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அய்யப்பன் கோவில் பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, பழைய கோவில் முழுவதும் அகற்றப்பட்டு புதிய கோவில் அமைக்கும் திருப்பபணி துவங்கி முடிந்தது.
ஏப்., 11ம் தேதி, காலை 8:47 மணி முதல் 9:57 மணிக்குள், அய்யப்பன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சபரிமலையின் பரம்பரை பூசாரிகளான செங்கன்னூர் தாழமன் மடம் கந்தாரு மோகனாரு தந்திரி, மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பந்தளம் மகாராஜா குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***