/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : ஏப் 24, 2025 11:57 PM

சென்னை, இந்தியன் வங்கி மற்றும் மயிலாப்பூர் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட, ஆடவரில் 72 அணிகள், மகளிரில் 32 அணிகள் என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாலை நடந்த மகளிருக்கான போட்டியில், ஹிந்துஸ்தான் பல்கலை அணி 55 - 50 என்ற புள்ளிக்கணக்கில், அரைஸ் பி.சி., அணியை தோற்கடித்தது.
ஆடவர் பிரிவில், மஹிந்திரா மெமோரியல் அணி, 72 - 22 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீதர் அகாடமியையும், சக்சஸ் அகாடமி, 45 - 22 என்ற புள்ளிக்கணக்கில் குளோபல் அகாடமி அணியையும் வீழ்த்தின.
ரெயின்போ அகாடமி, 65 - 61 என்ற புள்ளிக்கணக்கில் பெய்த் வாரியஸ் அகாடமியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.