/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் தப்பியவர் கைது
/
'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் தப்பியவர் கைது
ADDED : ஏப் 09, 2025 12:14 AM
சென்னை, ராமாபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 56; தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடை மேற்பார்வையாளர்.
கடந்த, 6ம் தேதி அன்று இரவு, 9:45 மணிக்கு, கடைக்கு வந்த 'குடி'மகன்கள் இருவர், குறிப்பிட்ட மதுவகையை கேட்டு, வங்கி ஏ.டி.எம்.,கார்டு கொடுத்துள்ளனர்.
கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், கார்டை உபயோகித்தபோது, சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அந்த கருவியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பினர்.
சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கருவியை பறித்துச் சென்ற, சேலத்தை சேர்ந்த பொறியாளர் கோகுல், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.

