/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலிக்க கட்டாயப்படுத்தி பெண்ணை தாக்கியவர் கைது
/
காதலிக்க கட்டாயப்படுத்தி பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : டிச 15, 2024 07:26 PM
சென்னை:மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, 25 வயது பட்டதாரி பெண், வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அவர், தன்னுடன் படித்த ஸ்ரீராம் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரை விட்டு விலகியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அத்துமீறி பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரீராம் காதலிக்கும்படி வற்புறுத்தி, கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
காயமடைந்த பெண் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், நேற்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

