/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ நிறுத்துவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது
/
ஆட்டோ நிறுத்துவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : ஏப் 24, 2025 12:24 AM
ஏழுகிணறு, ஏழுகிணறு, புனித சேவியர் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், 42; ஆட்டோ டிரைவர். சசிகுமார், கடந்த 21ம் தேதி மாலை, அவரது வீட்டின் அருகில், வழக்கமாக ஆட்டோ நிறுத்தும் இடத்தில், ஆட்டோவை நிறுத்த சென்றார்.
அங்கு, வாஞ்சிநாதன், 26, என்பவர், ஏற்கனவே அவரது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்ததால், அவரிடம் ஆட்டோவை எடுக்கும்படி சசிகுமார் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன், சசிகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கினார். மேலும், தடுக்க வந்த சசிகுமாரின் மனைவியையும், வாஞ்சிநாதன் தாக்கி, துணியை பிடித்து இழுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த ஏழுகிணறு போலீசார், ஏழுகிணறு, மலையப்பன் தெருவை சேர்ந்த வாஞ்சிநாதனை கைது செய்தனர்.

