/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
/
மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : ஜன 06, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிமங்கலம்: குன்றத்துார் அருகே, மணிமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 45. இவர், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்.
அப்போது, அருகில் மலைப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மது அருந்திய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ரமேஷ், அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து, மணிவண்ணன் தலையில் அடித்தார்.
இதில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் மணிவண்ணன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மணிவண்ணன் தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டன. இந்த சம்பவத்தில், ரமேஷை மணிமங்கலம் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

