/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரை ஒப்படைக்காத ஆத்திரம் ஓட்டுநரை தாக்கியவர் கைது
/
காரை ஒப்படைக்காத ஆத்திரம் ஓட்டுநரை தாக்கியவர் கைது
காரை ஒப்படைக்காத ஆத்திரம் ஓட்டுநரை தாக்கியவர் கைது
காரை ஒப்படைக்காத ஆத்திரம் ஓட்டுநரை தாக்கியவர் கைது
ADDED : ஜன 19, 2025 12:16 AM
அரும்பாக்கம் போரூரைச் சேர்ந்தவர் குணசேகரன், 54; கார் ஓட்டுநர். இவர், அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் வழக்கம் போல் காரை எடுத்த குணசேகரன், சவாரி முடித்து, காரை நிறுவனத்தில் மீண்டும் ஒப்படைக்காமல் ஏமாற்றி சுற்றி வந்தாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நிறுவன ஊழியர்கள், இருப்பிடம் கண்டறியும் ஜி.பி.எஸ்., உதவியுடன், சூளைமேடு, பஜனை கோவில் தெருவில் நின்றிருந்த காரை கண்டுபிடித்தனர்.
அப்போது, காருக்குள் போதையில் படுத்திருந்த குணசேகரனை, காருடன் கடத்தி, அரும்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு ஓர் அறையில் அடைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அங்கிருந்த தப்பிய குணசேகரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, இரு நாட்களுக்கு முன், அரும்பாக்கத்தை சேர்ந்த ராகுல், 28, திலீப், 24, அஜீஸ், 30 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த, டிராவல்ஸ் உரிமையாளரான கோயம்பேடைச் சேர்ந்த அனிஷ், 38, என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.