தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உருட்டு கட்டையால் தந்தையை தாக்கியவர் கைது

உருட்டு கட்டையால் தந்தையை தாக்கியவர் கைது

உருட்டு கட்டையால் தந்தையை தாக்கியவர் கைது


ADDED : மார் 18, 2025 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 12:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைபுரசைவாக்கம், எஸ்.எஸ்.புரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 64. இவரது மகன் சரத்குமார், 32. சரத்குமாருக்கும் அவரது மனைவி கனிஷ்மாவிற்கும் இடையே, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மருமகள் கனிஷ்மா கோபித்து கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு, மருமகளின் பெற்றோர், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சமாதனப்படுத்தினர். அப்போது, அங்கு வந்த அவரது மகன் சரத்குமார், மருமகளின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கும், அவரது மகன் சரத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சரத்குமார், ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் பேசி, கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்படி, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், சரத்குமாரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us