/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தள்ளுவண்டி கடைக்காரரை தாக்கிய நபர் கைது
/
தள்ளுவண்டி கடைக்காரரை தாக்கிய நபர் கைது
ADDED : ஆக 02, 2025 02:57 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், வள்ளியம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வம், 44. திருமங்கலத்தில் இவர் நடத்தும் தள்ளுவண்டி கடையை அகற்றும்படி, போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
இதை சரிசெய்ய, அண்ணா நகரைச் சேர்ந்த, ரஞ்சித்குமார், 48, என்பவரை அணுகி, செல்வம் உதவி கேட்டுள்ளார். அவர், 'நான் பத்திரிக்கையாளர், போலீசாரை சரிகட்டிவிடுகிறேன்' எனக்கூறி, செல்வத்திடம் 30,000 ரூபாய்க்கு மேல் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், வழக்கம்போல் போலீசார், கடையை அகற்ற கூறியுள்ளனர். இது குறித்து ரஞ்சித்குமாரிடம் கேட்ட போது, பணத்தை திருப்பி தராமல் அடித்து விரட்டியுள்ளார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில், செல்வம் புகார் அளித்தார். ரஞ்சித்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.