/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணியை கம்பியால் தாக்கியவர் கைது
/
அண்ணியை கம்பியால் தாக்கியவர் கைது
ADDED : நவ 27, 2024 12:28 AM
மதுரவாயல்
அண்ணியை தகாத வார்த்தைகளால் பேசி, கீழே தள்ளி கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், ஆலப்பாக்கம் கணபதி நகரைச் சேர்ந்தவர் சரோஜா, 29. இவரது கணவர் ராஜூ. இவர்களது பக்கத்து வீட்டில், ராஜூவின் தம்பி கண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இரு குடும்பத்திற்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 23ம் தேதி மாலை, மீண்டும் இரு குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணன், சரோஜாவை தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி, கம்பியால் சரமாரியாக தாக்கினார்.
காயமடைந்த சரோஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்படி, மதுரவாயல் போலீசார் நேற்று, கண்ணனை கைது செய்தனர்.