/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டாஸ்மாக்' ஊழியரை தாக்கியவர் கைது
/
'டாஸ்மாக்' ஊழியரை தாக்கியவர் கைது
ADDED : ஜன 31, 2025 11:46 PM
பெரம்பூர் :பெரவள்ளூர், கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 41. இவர், பெரம்பூர், எம்.எச்., சாலையில் உள்ள 214 எண் கொண்ட 'டாஸ்மாக்' கடையில் மதுக்கூடம் நடத்தி வருகிறார்.
'டாஸ்மாக்' கடையில் விற்பனையாளராக பெரம்பூரைச் சேர்ந்த பிரகாஷ்குமார், 40, என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு 9:30 மணியளவில் பிரகாஷ்குமார் பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த யுவராஜ், 'எதற்காக தனி நபர்களுக்கு, அதிக மது வகைகளை விற்பனை செய்கிறீர்கள். இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேநேரம் மதுக்கூடம் உரிமம் எடுக்க அதிக தொகை கொடுக்க வேண்டியுள்ளது' எனக்கூறி தகராறு செய்து ஒருமையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரகாஷ்குமார், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், யுவராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.