/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்பனையில் மோதல் வாலிபர்களை தாக்கியவர் கைது
/
கஞ்சா விற்பனையில் மோதல் வாலிபர்களை தாக்கியவர் கைது
கஞ்சா விற்பனையில் மோதல் வாலிபர்களை தாக்கியவர் கைது
கஞ்சா விற்பனையில் மோதல் வாலிபர்களை தாக்கியவர் கைது
ADDED : மே 09, 2025 01:18 AM

கோயம்பேடு,கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் வேலு, 20. தனியார் நிறுவன ஊழியர். வேலுவை பெண் தோழி ஒருவர் அழைத்ததால், அவரை காண. கடந்த 5ம் தேதி. நண்பர் தினேஷ் என்பவருடன் சென்றார்.
கோடம்பாக்கம் சிவன் கோவில் அருகே சென்ற போது, காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு ஆண் நபர்கள் மற்றும் வேலுவின் பெண் தோழி ஆகியோர் சேர்ந்து, வேலு மற்றும் அவரது நண்பரை கடத்தி சென்றனர்.
பின், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி, இருவரிடமும் கஞ்சா எங்கு விற்பனை செய்கின்றனர் என கேட்டு, கையாலும் கத்தியாலும் தாக்கினர்.
அப்போது, வேலு மற்றும் அவரது நண்பர் சத்தம் போடவே, அங்கிருந்த பகுதிவாசிகள் அங்கு கூடினர். எனவே, அவர்கள் காரில் தப்பினர்.
இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். அதில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அம்பத்துார், ராம் நகரை சேர்ந்த வெங்கடபாலசுப்பிரமணி, 35, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர் மீது அம்பத்துார் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
மேலும், தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில், கடத்தல் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.