/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து திருட முயன்றவர் கைது
/
வீடு புகுந்து திருட முயன்றவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், நள்ளிரவு வீட்டின் தடுப்பு சுவரை ஏறி குதித்து, திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகர், நான்காவது தெருவில் வசிப்பவர், பாலகிருஷ்ணன், 47. இவரது வீட்டை, கடந்த 8ம் தேதி இரவு, மர்மநபர் ஒருவர், தடுப்பு சுவரை ஏறிக் குதித்து, நோட்டமிட்டுள்ளார். சத்தம் கேட்டு, வீட்டில் பெருத்தியிருந்த கண்காணிப்பு கேரமராவை பாலகிருஷ்ணன் பார்த்துள்ளார். சுதாரித்த மர்மநபர், வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் தப்பினார்.
புகாரின்படி, திருமங்கலம் விசாரித்து, அண்ணா நகர் கிழக்கு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சாக்சன் டேவிட், 27 என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

