/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோர்ட்டுக்கு கஞ்சாவுடன் வந்தவர் கைது
/
கோர்ட்டுக்கு கஞ்சாவுடன் வந்தவர் கைது
ADDED : பிப் 15, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில், நேற்று வழக்கம்போல் காலை வழக்குகள் விசாரணை துவங்கியது.
அப்போது, வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபருக்கு, அவ்வழியே வந்த சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரீஷ், 25 என்பவர் கஞ்சா பொட்டலம் கொடுத்துள்ளார். முதலாவது நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரனின் தனி பாதுகாப்பு அலுவலர் அன்பரசு இதை கவனித்து, ஹரீசை பிடித்து, உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். வழக்குப்பதிவு செய்து, ஹரீசை போலீசார் கைது செய்தனர்.

