/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரியிடம் ரூ.1.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
வியாபாரியிடம் ரூ.1.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூன் 07, 2025 12:22 AM

சென்னை,அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55. கோயம்பேட்டில் உள்ள அரசு அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், மளிகை மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.
அவரது கடைக்கு பொருட்கள் வாங்க, அடிக்கடி வரும் பாஸ்கர் என்பவர், 'இவ்வளாகத்தில் உள்ள அரசு அதிகாரியிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறேன். உங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ள கடையையும், 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி தருகிறேன்' எனக்கூறி, வியாபாரிகளிடம் முன் பணமாக, 1.10 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
ஆனால், பாஸ்கர் வாக்குறுதி அளித்தப்படி கடையை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் அலைக்கழித்து வந்துள்ளார்.
இதுகுறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில், அண்ணாமலை புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட, ஒரகடத்தை சேர்ந்த பாஸ்கர், 54 என்பவரை நேற்று கைது செய்தனர்.
***