/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் மோசடி மேடவாக்கம் நபர் கைது
/
ரூ.10 லட்சம் மோசடி மேடவாக்கம் நபர் கைது
ADDED : நவ 10, 2025 01:37 AM

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் சபரி சாலையில் சூப்பர் மார்கெட் நடத்தி வருபவர் பேரின்பராஜா, 55. இவரது கடையில், உறவினர் ஜியோசுகன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜியோசுகனுக்கு, மேடவாக்கம் வீரபத்திர நகரை சேர்ந்த ஜான் என்பவர் அறிமுகமாகி உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட ஜான், தொழில் செய்ய, 10 லட்சம் ரூபாய் வேண்டும் என, ஜியோசுகனிடம் கேட்டுள்ளார்.
அதனால், கடையின் உரிமையாளர் பேரின்பராஜாவிடம் ஜானை அறிமுகப்படுத்திய ஜியோசுகன், கடந்த 2023 மற்றும் 2024ல் இரு தவணைகளாக, 10 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பணத்தை, மூன்று மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய ஜான், இதுவரை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனால், கடந்த ஜூன் மாதம், பேரின்பராஜா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்கு பதிந்த மடிப்பாக்கம் போலீசார், கடந்த 7ம் தேதி ஜானை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

