/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது
/
போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது
போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது
போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது
ADDED : நவ 10, 2025 01:37 AM
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சென்னை வாலிபர்கள் இருவர், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, நடப்பு ஆண்டு, ஜன., 16ம் தேதி, திருவல்லிக்கேணி மாட்டான் குப்பத்தைச் சேர்ந்த வினோத், 34, பாலாஜி, 31, ஆகியோர், திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின், அண்ணா சதுக்கம் காவல் நிலைய எல்லையில், 20 கிலோ கஞ்சா கடத்திய வழக்கிலும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமினில் வெளிவந்த பின், தலைமறைவாகினர்.
இதனால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருப்பதாக, அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், மேற்கு வங்க போலீசார் உதவியுடன் வினோத், பாலாஜி ஆகியோரை கைது செய்து, மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

