/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் வாரிய வேலை ஆசைக்காட்டி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
மின் வாரிய வேலை ஆசைக்காட்டி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது
மின் வாரிய வேலை ஆசைக்காட்டி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது
மின் வாரிய வேலை ஆசைக்காட்டி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஆக 08, 2025 12:19 AM

அயனாவரம், மின் வாரியத்தில், உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், சக்ரவர்த்தி நகரைச் சேர்ந்தவர் அய்யங்கார், 62. இவர், அயனாவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், 2021ல் என் மகள் ஹேமாவதி, இரண்டாவது பிரசவத்திற்காக வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது, அவரது கணவருடைய உறவினரான சுபத்ரா மற்றும் அவரது கணவர் சந்திரசேகர் ஆகியோர், வீட்டிற்கு வந்திருந்தனர். இருவரும் கெருகம்பாக்கத்தில் கடை நடத்துவதாகவும், என் மருமகன் கோபிநாத்திற்கு, மின் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும் கூறினர்.
அதற்காக, 2021ல் நான்கு தவணையாக, 18 லட்சம் ரூபாய் சந்திரசேகரன் வங்கி கணக்கிற்கு அனுப்பினோம். வேலையும் வாங்கி தாராமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றினார். இதுகுறித்து கேட்டால் பணத்தை தரமுடியாது என மிரட்டுகிறார்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசரித்தபோது, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, கெருகம்பாக்கம், ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த சந்திரசேகர், 42, என்பவரை, போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.