ADDED : ஜூன் 10, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர், தி.நகரசை் சேர்ந்தவர் பிரியங்கா, 40. இவர் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, திரு.வி.க.நகர் ஆர்.கே., கன்சல்டன்சி நிறுவனத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், 27 லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளார்.
பல மாதங்களாகியும், கடன் பெற்று தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து, பிரியங்கா கொடுத்த புகாரின்படி, திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்து, ரவிக்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

