/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பணி வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் சுருட்டியவர் கைது
/
அரசு பணி வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் சுருட்டியவர் கைது
அரசு பணி வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் சுருட்டியவர் கைது
அரசு பணி வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் சுருட்டியவர் கைது
ADDED : ஜன 30, 2025 12:31 AM

சென்னை: ராயப்பேட்டை, நாயர் வரதபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அசன், 27; பகுதி நேரமாக கணிணி பழுது பார்க்கும் தொழில் செய்கிறார்.
இவர், வீட்டிற்கு அருகே உள்ள கணினி மையத்திற்கு அவ்வப்போது பழுது நீக்கசென்று வரும்போது பைசல், 34, என்பவர், அறிமுகமாகியுள்ளார். தான் வக்பு வாரியத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளார்.
மேலும், தலைமை செயலகத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்றும், தான் சொன்னால் அரசு வேலை கிடைக்கும் என்றும், அசனை நம்ப வைத்துள்ளார்.
தவிர, வக்பு வாரியத்தில் குறைந்த வாடகையில் 30 ஆண்டுகள் தங்கி கொள்ள வீடு எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.
பைசல் பேச்சை நம்பிய அசன், தலைமை செயலகத்தில் அரசு பணி மற்றும் குறைந்த வாடகையில் வீடு பெற, மொத்தம் 22 லட்சம் ரூபாய் தந்துள்ளார்.
இவரை போலவே, அசனுக்கு தெரிந்த கார்த்திக் 6 லட்சம் ரூபாய், சாதிக் உசேன் 4 லட்சம் ரூபாயை, பைசலிடம் கொடுத்து அரசு வேலைக்கு காத்திருந்தனர்.
மூவரிடமும் பணத்தை பெற்ற பைசல், திடீரென தலைமறைவானார். பாதிக்கப்பட்ட மூவரும், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார், ராயப்பேட்டையைச் சேர்ந்த பைசலை, 34, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 6.5 லட்சம் ரூபாய், 90 கிராம் தங்க நகைகள், 96 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஏழு மொபைல் போன் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

