/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது
/
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் சுருட்டியவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 12:16 AM

ஆவடி, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 5.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம், இச்சிப்புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2024 ஏப்ரல் மாதம், அவரது நண்பர்கள் வாயிலாக, சேஷாத்ரி, 38, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக, கார்த்திகேயனிடம் ஆசை வார்த்தை கூறிய சேஷாத்ரியை நம்பி, அவரது நண்பர்கள் யுகேஷ் மற்றும் ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து, 5.50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கி கொண்ட சேஷாத்ரி, வேலை வாங்கி தராமல் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், கடந்த அக்., மாதம் 21ம் தேதி, ஆவடி போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், தலைமறைவாக இருந்த ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சேஷாத்ரியை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.