/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது
/
இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது
ADDED : அக் 12, 2025 02:05 AM
சென்னை:இளம்பெண் குளிப்பதை படம் எடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியலறையில், குளித்து கொண்டிருந்தார். அப்போது, ஜன்னல் அருகே சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்த போது, மர்மநபர் யாரோ மொபைல் போனில் வீடியோ எடுப்பது தெரிந்தது.
உடனே, அப்பெண் சத்தம் போடவே, உறவினர்கள் குளியலறை ஜன்னல் அருகே சென்று பார்த்தனர். அப்போது, மொபைல் போனில் வீடியோ எடுத்தது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சொக்கலிங்கம், 43, என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க முயன்ற போது, தகாத வார்த்தையில் திட்டி தப்பினார்.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, சொக்கலிங்கத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.