/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாமினில் வந்து பெண்ணுக்கு தொந்தரவு துாத்துக்குடி நபருக்கு மீண்டும் 'காப்பு'
/
ஜாமினில் வந்து பெண்ணுக்கு தொந்தரவு துாத்துக்குடி நபருக்கு மீண்டும் 'காப்பு'
ஜாமினில் வந்து பெண்ணுக்கு தொந்தரவு துாத்துக்குடி நபருக்கு மீண்டும் 'காப்பு'
ஜாமினில் வந்து பெண்ணுக்கு தொந்தரவு துாத்துக்குடி நபருக்கு மீண்டும் 'காப்பு'
ADDED : அக் 12, 2025 02:06 AM
சென்னை:பெண்ணை ஆபாசமாக சித்தரித்து தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த துாத்துக்குடி நபர், மீண்டும் அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதுாறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிடவே, மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த 42 வயது பெண், கடந்த மே 28ம் தேதி மேற்கு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'துாத்துக்குடி மாவட்டம் முனியசாமிபுரத்தைச் சேர்ந்த கோபி, 42 என்பவர், 'பேஸ்புக்' மூலம் பழக்கமானார். அவரது தவறான நோக்கத்தை அறிந்து, அவருடனான பழக்கத்தை நிறுத்திக் கொண்டேன்.
'அவரது மொபைல் போன் எண்ணை 'பிளாக்' செய்த பிறகும், வேறு ஒரு எண்ணில் இருந்து என் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவதுாறு பரப்பி வருகிறார்.
'அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த போலீசார், கோபியை கடந்த மே 30ம் தேதி கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த கோபி, மீண்டும் அப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் எண்ணத்துடன், அப்பெண்ணின் பெயரில் போலியாக 'பேஸ்புக்' பக்கம் துவக்கியுள்ளார். அதில், ஆபாசமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும், 'தன்னை சிறைக்கு அனுப்பிய நீங்கள், குடும்பத்துடன் வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல் வாழவே விடமாட்டேன்' என மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து, செப்., 23ம் தேதி மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், கோபியை மீண்டும் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, இரண்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.