/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாலிகேப்' போலி ஒயர் தயாரித்து விற்றவர் கைது
/
'பாலிகேப்' போலி ஒயர் தயாரித்து விற்றவர் கைது
ADDED : டிச 30, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார், 40. இவர், மண்ணடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், வணிக வளாகம் ஒன்றில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இக்கடையில், 'பாலிகேப்' என்ற பிரபல நிறுவனத்தின் பெயரில், போலியாக மின் ஒயர்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி., செந்தில்குமாரி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, கிஷோர்குமாரை நேற்று கைது செய்தனர். அவரது கடையில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மின் சாதன ஒயர்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

