/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விலங்குகள் நல பெண் ஆர்வலரை ஆபாசமாக பேசியவர் கைது
/
விலங்குகள் நல பெண் ஆர்வலரை ஆபாசமாக பேசியவர் கைது
விலங்குகள் நல பெண் ஆர்வலரை ஆபாசமாக பேசியவர் கைது
விலங்குகள் நல பெண் ஆர்வலரை ஆபாசமாக பேசியவர் கைது
ADDED : நவ 24, 2025 02:48 AM
திருவான்மியூர்: விலங்குகள் நல பெண் ஆர்வலர் குறித்து, அவதுாறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளத்தில் பதிவேற்றிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மெரிட்டினா, 30. விலங்குகள் நல ஆர்வலர். இவர், சில தினங்களுக்கு முன், விலங்குகளை பாதுகாப்பது குறித்து, காணொலி ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு, கோட்டூர்புரத்தை சேர்ந்த முரளீதரன், 56, என்பவர், சமூக வலைதளத்தில், மெரிட்டினா குறித்து அவதுாறாகவும், ஆபாசமாகவும் பேசினார்.
இதுகுறித்து, மெரிட்டினா திருவான்மியூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். நேற்று, முரளீதரனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.