/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது
/
வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது
ADDED : மார் 23, 2025 12:27 AM

ராமாபுரம், ராமாபுரம் தாங்கல் தெருவில், நேற்று முன்தினம் ராமாபுரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரது பையை சோதனை செய்தனர்.
அதில், போதை மாத்திரையாக பயன்படுத்தும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்ட நபர், ராமாபுரம் அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆதி, 22, என தெரியவந்தது.
அவரிடம் இருந்து, 260 டேபென்டாடோல் உடல் வலி நிவாரண மாத்திரைகள், மொபைல் போன் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கு உள்ளது.