ADDED : ஏப் 13, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்:செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். இது குறித்து செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாலிபரின் அடையாளத்தை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு, 23 என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

