/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது
/
பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது
ADDED : ஜூலை 28, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் இருந்து, 12,000 ரூபாய் வழிப்பறி செய்த நபரை புழல் போலீசார் கைது செய்தனர்.
புழல், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 45. புழலில், சாலையோரம் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2௪ம் தேதி அவ்வழியாக வந்த நபர் கஸ்துாரியை தாக்கி, அவரிடம் இருந்த 12,000 ரூபாயை பறித்து தப்பினார்.
இது குறித்து புழல் போலீசார் விசாரித்தனர்.
இதில், காவாங்கரை, மீனாட்சி நகர் முதல் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், 30, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, 9,500 ரூபாய் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.