/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே நிலம் இருவருக்கு விற்று மோசடி செய்த நபர் சிக்கினார்
/
ஒரே நிலம் இருவருக்கு விற்று மோசடி செய்த நபர் சிக்கினார்
ஒரே நிலம் இருவருக்கு விற்று மோசடி செய்த நபர் சிக்கினார்
ஒரே நிலம் இருவருக்கு விற்று மோசடி செய்த நபர் சிக்கினார்
ADDED : ஜூலை 03, 2025 12:29 AM

ஆவடி, ஒரே நிலத்தை இருவருக்கு விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், சக்தி நகர் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கனியன் பூங்குன்றன். இவர், 2007ல், திருநின்றவூர் அடுத்த வெள்ளிவாயல் கிராமத்தில், சர்வே எண்: 120/2ல் 77 சென்ட் நிலத்தை, வெங்கடேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். இதன் மதிப்பு, 78 லட்சம் ரூபாய்.
அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றபோது, அதே நிலம் பெருமாள் என்பவருக்கு ஏற்கனவே பொது அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனியன் பூங்குன்றன், ஆவடி, மத்திய குற்றப்பிரிவில் 2023 ஜூன் மாதம் புகார் அளித்தார்.
விசாரணையில், பச்சைக்கனி, ராஜு, கவுதம் சந்த், வெங்கடேஷ், சங்கர், மகாராஜன், சிவகுமார் ஆகிய ஏழு பேர், இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதும், இதற்கு சிவகுமார் என்பவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது.
ஆனால், சிவகுமார், 34, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய, பூந்தமல்லி நீதிமன்றம் 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான தனிப்படை போலீசார், சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சிவகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.