/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலை போனதால் ஊழியரை வெட்டியவர் கைது
/
வேலை போனதால் ஊழியரை வெட்டியவர் கைது
ADDED : ஏப் 19, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர்,
தி.நகரை சேர்ந்தவர் மசூர், 34. இவர், தி.நகரில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் காசாளராக பணி செய்து வருகிறார்.
அதே கடையில் பணி செய்தவர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த எழில், 30. இவர் எட்டு மாதங்களுக்கு முன், வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்.
இதற்கு மசூர் தான் காரணம் என எண்ணிய எழில், நேற்று முன்தினம் இரவு, கடையில் இருந்து வெளியே வந்த மசூரை, காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டினார். இதில், மசூரின் வலது கையில் இரண்டு இடங்களில் சிறிய வெட்டு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரையடுத்து எழிலை நேற்று மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.

