/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது; நண்பருக்கு வலை
/
இளைஞருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது; நண்பருக்கு வலை
இளைஞருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது; நண்பருக்கு வலை
இளைஞருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது; நண்பருக்கு வலை
ADDED : மே 23, 2025 12:35 AM
குன்றத்துார்,குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோபி, 18. நடுவீரப்பட்டு காந்தி நகரில் உள்ள மைதானத்தில், இரண்டு மாதங்களுக்கு முன், கோபி நண்பர்களுடன் வாலிபால் விளையாடினார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்வர், 20, ரஹமதுல்லா, 19, ஆகியோர், மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தனர்.
அப்போது, இருவரையும் கோபி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று நடுவீரப்பட்டு பகுதியில் தனியாக இருந்த கோபியை, அன்வர், ரஹமதுல்லா ஆகிய இருவரும் சேர்ந்து, அரிவாளால் வெட்டினர்.
பலத்த வெட்டு காயமடைந்த கோபி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
சோமங்கலம் போலீசார், நேற்று அன்வரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஹமதுல்லாவை தேடி வருகின்றனர்.