/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் பஸ் நிலையத்தில் செயின் பறித்த நபர் கைது
/
தி.நகர் பஸ் நிலையத்தில் செயின் பறித்த நபர் கைது
ADDED : ஏப் 11, 2025 11:43 PM

மாம்பலம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராணி, 26. இவர், சைதாப்பேட்டையில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கி, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வடபழனி கோவிலுக்கு சென்று விட்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர், அவரது கழுத்தில் இருந்த ஒன்றேகால் சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். யோகராணி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் சைதாப்பேட்டை, சி.ஐ.டி., நகர் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜா, 40, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.