/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
/
ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : ஜூலை 03, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, பாடி, மண்ணுார்பேட்டையைச் சேர்ந்தவர் பேபி கலா, 47. இவர், 15ம் தேதி மாலை, வேப்பம்பட்டில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று, மின்சார ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இந்து கல்லுாரியில் நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது, ரயில் நிலையத்தில் நின்றிருந்த மர்ம நபர், பேபி கலாவின் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பினார்.
இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஷாஹீன் ஷா, 26, மற்றும் அமீன், 26, ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.