/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
/
முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ADDED : ஏப் 23, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவை சேர்ந்தவர் சங்கரபெருமாள், 72. கடந்த 14ம் தேதி, மெரினா லேடி வெலிங்டன் கல்லுாரி முன் நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் முகவரி கேட்பது போல நடித்து, அவரது மொபைல்போனை பறித்து தப்பினர்.
இது தொடர்பாக, மண்ணடியைச் சேர்ந்த ரமேஷ்குமார், 35, சிக்கந்தர், 35 ஆகிய இருவரையும், 16ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த மண்ணடியைச் சேர்ந்த அணில்குமார், 27 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

