ADDED : செப் 07, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், இளம்பெண்ணிடம் மொபைல் போன் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கொளத்துார், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா, 23. இவர், வியாசர்பாடி செல்வதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்தார்.
அப்போது கையில் வைத்திருந்த 20,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.
பவித்ரா தன் நண்பரின் உதவியுடன், மொபைல்போனின் ஐ.எம்.இ.ஐ., எண் சேவையை பயன்படுத்தி, மொபைல் போன் இருப்பிடம் கண்டறிந்து, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ், 35, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கூட்டாளியை தேடி வருகின்றனர்.