sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆதார், ரேஷன் கார்டு திருடிய நபர் கைது

/

 ஆதார், ரேஷன் கார்டு திருடிய நபர் கைது

 ஆதார், ரேஷன் கார்டு திருடிய நபர் கைது

 ஆதார், ரேஷன் கார்டு திருடிய நபர் கைது


ADDED : ஜன 18, 2026 05:18 AM

Google News

ADDED : ஜன 18, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பூக்கடை பகுதியில், சாலையோரம் தங்கியிருந்தோரின் பீரோவை உடைத்து, பணம், ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பூக்கடை தேவராஜ் முதலி தெருவில், சாலையோரமாக குடும்பத்தினருடன் வசிப்பவர் அம்பிகா, 38; அதே பகுதியில், மதிய உணவு கடை நடத்தி வருகிறார்.

இவர், அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தில், பீரோவை வைத்து, சேமிப்பு பணம், ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்தி வந்தார். கடந்த 16ம் தேதி காலை, மதிய உணவுக்கு பொருட்கள் வாங்க, பீரோவை திறக்க முயன்றார்.

அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6,000 ரூபாய், ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை, மர்ம நபர் திருடியது தெரியவந்தது.

அதே போல், அன்னபூரணி என்பவரின் பீரோவையும் உடைத்து, ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த பூக்கடை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த விக்கி, 23; என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us