/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளரின் நகை திருடியவர் கைது
/
துாய்மை பணியாளரின் நகை திருடியவர் கைது
ADDED : ஜூலை 23, 2025 12:57 AM

ஏழுகிணறு, துாய்மை பணியாளரின் நகைகள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஏழுகிணறு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் நரசம்மா, 54; மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர். மே 19ம் தேதி, நெல்லுாரில் நடந்த பேத்தியின் திருமணத்தில் பங்கேற்று, 20ம் தேதி காலை வேலைக்கு வந்தார்.
அப்போது, திருமணத்திற்காக அணிந்திருந்த 8 சவரன் தங்க நகைகளை பையில் கழற்றி வைத்தார். பையை மின்ட் தெருவில் உள்ள இலவச பொது கழிப்பறையில், வழக்கமாக துணிகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்து பணிக்கு சென்றார்.
இரவு வேலை முடித்து திரும்பி வந்து பார்த்தபோது, தங்க நகைளுடன் பை மாயமானது தெரிய வந்தது. இது குறித்து, ஏழுகிணறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ஓட்டேரி, செல்வபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த யாமினி, 38, என்பவரை, நேற்று கைது செய்தனர். யாமினி, இலவச பொது ஒப்பனை அறையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருவதும், திருடிய நகைகளை நகை கடையில் கொடுத்து மாற்றி, புதிய நகை வாங்கியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
யாமினியை கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.