/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீல் வீட்டில் திருடிய அமைந்தகரை நபர் கைது
/
வக்கீல் வீட்டில் திருடிய அமைந்தகரை நபர் கைது
ADDED : செப் 21, 2025 12:37 AM
சென்னை, வழக்கறிஞரின் வீட்டில் 13 சவரன் நகை, ஐம்பொன் நடராஜர் சிலை மற்றும் பித்தளை பொருட்கள் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன், 54; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு அண்ணாநகர், சாந்தி காலனி, 8வது பிரதான சாலையில் வீடு உள்ளது.
நேற்று முன்தினம் காலை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 13 சவரன் நகை, ஐம்பொன் நடராஜர் சிலை, பித்தளை பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, அண்ணாநகர் போலீசார் விசாரித்தனர். இதில், அமைந்தகரை பாரதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ், 37 என்பது தெரிய வந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், ஒன்றரை அடி ஐம்பொன் நடராஜர் சிலை, 30 கிலோ பித்தளை குத்துவிளக்கு, வெள்ளி முலாம் பூசப்பட்ட மரக்கிளையுடன் கூடிய குருவி சிலை மற்றும் பித்தளை முலாம் பூசப்பட்ட, 2 குவளைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.