/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரைக்கு சென்றவரின் போன் திருடியவர் கைது
/
கடற்கரைக்கு சென்றவரின் போன் திருடியவர் கைது
ADDED : ஆக 29, 2025 10:25 PM

காசிமேடு, காசிமேடு கடற்கரையில், கல்லுாரி மாணவியின் மொபைல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ராமாபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது பெண்; இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாணவி, தன் தோழிகளுடன், காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில், விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்க்க சென்றார்.
அப்போது, மாணவி தன் மொபைல்போன் அடங்கிய பையை, கடற்கரை அருகில் வைத்து, கடல் அலையில் இறங்கி கால் நனைத்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி பையில் வைத்திருந்த மொபைல்போனை மர்ம நபர் திருடி கொண்டு ஓடினார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கத்தவே, ரோந்து பணியில் இருந்த போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், எண்ணுார், நேதாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 32 என்பதும், இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.