/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயர் நீதிமன்ற வளாகத்தில் பைப்பை திருடியவர் கைது
/
உயர் நீதிமன்ற வளாகத்தில் பைப்பை திருடியவர் கைது
ADDED : ஆக 07, 2025 12:46 AM
சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞரின் கைப்பை திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பயிற்சி வழக்கறிஞராக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண், பணிபுரிந்து வருகிறார்.
இவர், தன் மொபைல் போன், டைரி அடங்கிய கைப்பையை, நேற்று உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாடி படிக்கட்டில் வைத்து சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, கைப்பை திருட்டு போனது தெரிய வந்தது.
இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் கைப்பையை கொண்டு செல்வதை அப்பெண் பார்த்துள்ளார். அங்கிருந்தோர் உதவியுடன் அவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், ஆவடியைச் சேர்ந்த பென்சிலய்யா, 45, என்பதும், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.