/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை ரூ.1 லட்சத்துக்கு திருடியவர் கைது
/
சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை ரூ.1 லட்சத்துக்கு திருடியவர் கைது
சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை ரூ.1 லட்சத்துக்கு திருடியவர் கைது
சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை ரூ.1 லட்சத்துக்கு திருடியவர் கைது
ADDED : ஜூலை 12, 2025 12:28 AM

சென்னை, சூப்பர் மார்க்கெட்டிற்கு அடிக்கடி வந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீலியட்மேரி, 38; அண்ணா நகர் மேற்கு, இமயம் காலனியில் உள்ள சூப்பர் மார்க்கெட் மேலாளர்.
இவர், கடந்த மே 30ம் தேதி, கடையில் உள்ள சரக்குகளை கணக்கெடுத்துள்ளார். அப்போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் கணக்கில் வராமல் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஜீலியட்மேரி, திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, வாலிபர் ஒருவர் அடிக்கடி கடைக்கு வந்து, பொருட்களை வாங்குவதுபோல் நடித்து, நெய், பாதாம், பிஸ்தா, டீ துாள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை மட்டும் குறிவைத்து திருடி, உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து சென்றது பதிவாகியிருந்தது. அனைத்து பொருட்களிலும் பார் கோடு இருந்தும், அலாரம் அடிக்காதவாறு நுாதனமாக திருடிச் சென்றுள்ளார்.
போலீசார் விசாரித்து, கொளத்துாரைச் சேர்ந்த ராகேஷ், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், ராகேஷ் திருடிய பொருட்களை, நண்பர்களிடம் குறைந்த விலைக்கு விற்று, பணத்தை செலவு செய்தது தெரிந்தது.