/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது
/
முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது
ADDED : மே 31, 2025 03:11 AM
தரமணி:பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லியாகத் அலிகான், 61. இவர், தரமணி, பாரதி நகர், பரணி தெருவில், உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்திற்கு தேவையான காய்கறி வாங்குவதற்காக, வீட்டில் 7,000 ரூபாய் வைத்திருந்தார்.
நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த பணப்பெட்டி மாயமாகியிருந்தது. இது குறித்த புகாரின் படி, தரமணி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில், லியாகத் அலிகானின் கடையில் பணிபுரியும், வேளச்சேரியை சேர்ந்த முகமது ஜாவித், 21, சிக்கினார்.
அவரை பிடித்து விசாரித்தபோது, வீட்டிற்குள் நுழைந்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தை மீட்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.