/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நட்சத்திர ஹோட்டலின் லாக்கரில் பயணி பையை திருடியவர் கைது
/
நட்சத்திர ஹோட்டலின் லாக்கரில் பயணி பையை திருடியவர் கைது
நட்சத்திர ஹோட்டலின் லாக்கரில் பயணி பையை திருடியவர் கைது
நட்சத்திர ஹோட்டலின் லாக்கரில் பயணி பையை திருடியவர் கைது
ADDED : பிப் 08, 2026 05:52 AM

சென்னை: நட்சத்திர ஹோட்டல் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணியின் கை பையை திருடியவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெயவரதன் ஜனஸன் பஞ்சாபி, 48. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'தி பார்க்' நட்சத்திர ஹோட்டலில், ஜன., 26ல் தங்கியிருந்தார்.
அவசரமாக, 28ம் தேதி அறையை காலி செய்த அவர், பிப்., 5ம் தேதி வருவதாகவும், அதுவரை தன் பையை லாக்கரில் வைக்கவும் கூறிச் சென்றார். கடந்த 5ம் தேதி ஜெயவரதன் வந்துகேட்டபோது, லாக்கரில் இருந்த பை திருடுபோனது தெரிந்தது.
தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, மண்ணடியைச் சேர்ந்த மொஹைதீன் அக்பர் உசேன், 52, என்பவரை கைது செய்து, ஜெயவரதன் பையை பறிமுதல் செய்தனர். அப்பையில் இந்திய பணம் 15,500 ரூபாயும், 600 அமெரிக்க டாலர், 220 யூரோ இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
போலீசார் கூறியதாவது:
கடந்த 3ம் தேதி, நட்சத்திர ஹோட்டலில் தங்குவது போல் நடித்து, லாக்கரில் இருந்த குஜராத் சுற்றுலா பயணியின் பையை திருடிச் சென்றுள்ளார்.
அதேபோல், கடந்த 5ம் தேதி, பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பெல்ஜியம் நாட்டு பெண் பயணியிடம் 200 அமெரிக்க டாலரையும் திருடியுள்ளார். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
கைதான மொஹைதீன் அக்பர் உசேன் மீது, ஏற்கனவே திருட்டு உட்பட ஆறு வழக்குகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

