/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனிமையில் இருந்த தம்பதியை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
/
தனிமையில் இருந்த தம்பதியை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
தனிமையில் இருந்த தம்பதியை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
தனிமையில் இருந்த தம்பதியை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
ADDED : ஆக 21, 2025 01:20 AM

ஊரப்பாக்கம், தம்பதி தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய நபரை , போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் பெண் ஒருவரின் மொபைல் போனுக்கு, ' வாட்ஸாப் ' மூலமாக, சமீபத்தில் ஒரு வீடியோ வந்துள்ளது.
அதில், அவர் தன் கணவருடன் தனிமையில் இருந்த காட்சிகள் இருந்தன. அ தன் பின், அந்த வீடியோவை அனுப்பிய மர்ம நபர், அப்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் கேட்கும் பணத்தை தராவிட்டால், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இது குறித்து அப்பெண், தன் கணவரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தம்பதி, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசா ரின் விசாரணையில், அந்த மர்ம நபர், பெரும்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த பிரகாஷ், 27, என தெரிந்தது.
தலைமறைவா க இருந்த அவரை , போலீசார் தேடி வந்த நிலையில், அரியலுார் மாவட்டம் உடையார்பாளைம் பகுதியில், பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். தனக்கு தெரிந்த பெண் ஒருவர் மூலமாக, அந்த வீடியோ கிடைத்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரகாஷ் , நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீடியோ எடுத்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.