தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சென்சஸ்' எடுப்பதாக செயின் பறிக்க முயன்றவர் கைது

 'சென்சஸ்' எடுப்பதாக செயின் பறிக்க முயன்றவர் கைது

 'சென்சஸ்' எடுப்பதாக செயின் பறிக்க முயன்றவர் கைது


ADDED : பிப் 14, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செவ்வாப்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அடுத்த புட்லுாரைச் சேர்ந்தவர் ஷியாமளா, 55. இவர், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா, 28, என்பவர் சென்சஸ் எடுக்க வந்ததாக கூறி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பவித்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், திடீரென ஷியாமளாவை தாக்கி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது, பவித்ராவிடமிருந்து தப்பியவர், வீட்டின் கதவை வெளி பக்கமாக பூட்டிவிட்டு சத்தமிட்டார்.

அருகிலிருந்தோர் அளித்த தகவலின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பவித்ராவை கைது செய்தனர். காயமடைந்த ஷியாமளா, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us